தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

440     இலக


440

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


இரட்டைமணிமாலை, இணைமணிமாலை, மும்மணிக் கோவை,

ஒலிஅந்தாதி இருபா இருபஃது பயோதரப்பத்து,

நயனப்பத்து என்பன.

 
‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇ ரட்டை
 
மணிமாலை; நூறுவெள்ளை அகவற் பாவால்
 
பின்னர்க்கலித் துறையதுஇணை மணிமா லைப்பேர்;
 
பேசுஅகவல் வெள்ளைகலித் துறைமுப் பானால்
 
சொன்னதுமும் மணிக்கோவை; வகுப்பு முப்பான்
 
சூழ்ஒலிஅந் தாதி;வெள்ளை அகவற் பாவால்
 
பன்னும்இரு பாஇருபது; இவைஅந் தாதி;
 
பயோதரம்,கண் உரைத்திடில்அப் பேர்ப்பத்து ஆமால்.’
 

4

தசாங்கப்பத்து, சின்னப்பூ, விருத்தலக்கணம் என்பன.

 
‘பத்துஇயல்வெண் பாவின்மலை நதிநாடு ஊர்தார்
 
பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
 
மெத்துதசாங் கப்பத்தாம்; தசாங்கம் தன்னை
 
வெண்பாவால் தொண்ணூறுஏழ் பஃது முப்பான்
 
 இத்தகைமை மொழிவதுசின் னப்பூ ஆகும்;
 
எழில்குடைசெங் கோல்நாடுஊர் வில்வாள் வேல்மா
 
அத்திதனித் தனிஅகவல் விருத்தம் பத்தால்
 
அறைவிருத்த இலக்கணமாம்; அமுதச் சொல்லாய்!’
 

 5

          ஊசல், வருக்கமாலை, மும்மணிமாலை,

நான்மணிமாலை என்பன.

 

‘சொற்கலித்தா ழிசைஅகவல் விருத்தம் ஆதல்
 
சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்;
 
வற்கஉயிர் கசதநப மவ-எட் டின்சூழ்
 
மருவுஅகவல் வரின்வருக்க மாலை; வெள்ளை
 
நற்கலியின் துறைஅகவல் அந்தா தித்த
 
நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர்; மேலோர்
 
ஒற்கம்இல்ஆ சிரியவிருத் தத்தைக் கூட்டில்
 
ஒருநாற்பான் நான்மணிமா லைக்குஎன்று ஓதே.’ 
 

6



புதுப்பிக்கபட்ட நாள் : 05-02-2019 10:35:40(இந்திய நேரம்)