தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பாட்டியல் - பிற்சேர்க்கை 1

441


அலங்கார பஞ்சகம், அட்டமங்கலம், நவமணிமாலை

ஒருபாஒருபஃது என்பன.

‘ஓதும்வெள்ளை கலித்துறைஆ சிரியம் வஞ்சி
 
உறுவிருத்தம் வகுப்புஐந்தால் உரைக்கில் அம்ம
கோதில்அலங் காரபஞ்ச கப்பேர்; எட்டுக்
 
குலவுஅகவல் விருத்தம்உறு தெய்வம் காப்பாம்
ஈதுஅட்ட மங்கலம்;இப் படிஒன் பானால்
 
ஏத்துநவ மணிமாலை; எப்பாட் டேனும்
தீதில்ஒரு பான்ஒருபா ஒருபஃது என்ப;
 
செப்புகஇவை நான்கையும்அந் தாதி தன்னால்.’
 

7

பல்சந்தமாலை, ஆற்றுப்படை, பாதாதிகேசம்,
கேசாதிபாதம்அங்கமாலை என்பன

 
 ‘அகவல்விருத் தம்வகுப்புஆ தல்பத்து ஆதி
 
அந்தம்நூறு ஆகும்பல் சந்த மாலை;
புகழ்அகவ லால்புலவர் பாணர் கூத்தர்
 
பொருநர்முத லவர்உரைஆற்று எதிர்ப்பா டாகப்
பகருமதுஆற் றுப்படையாம்; கலிவெண் பாவால்
 
பாதாதி கேசம்கே சாதி பாதம்
மகிழஉரைத் திடில்அந்தப் பேராம்; அந்த
 
வகைஉரைக்கின் வெளிவிருத்தத்து அங்க மாலை.’
 

8

மங்கலவள்ளை, மெய்க்கீர்த்தி, புகழ்ச்சிமாலை,

நாமமாலை, கைக்கிளை என்பன
‘மாசில்குல மகளுக்கு வகுப்பு வெண்பா
 
வருபொருள்ஒன் பான்ஒன்பா னாகப் பாடில்
தேசுஉயர்மங் கலவள்ளை; வேந்தர்க்கு உண்மை
 
திகழ்கீர்த்தி உரைப்பதுமெய்க் கீர்த்தி; வஞ்சி
பேசுகுணப் பேர்அடுக்கி மடவார்க்கு ஓதில்
 
பெரும்புகழ்ச்சி மாலை;அப் படிஆண் பாற்கு
மாசுஅகல உரைக்கில்அது நாம மாலை;
 
வரும்காமம் ஒருதலைகைக் கிளைய தாகும்.’
 

9



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 17:07:56(இந்திய நேரம்)