தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


பாட்டியல் - பிற்சேர்க்கை 4   

497


91.  வாயுறை வாழ்த்து :
வேம்பும் கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள்
முன்னர்த்தாங்காக்காவாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என
மெய்ப்பொருளு வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது.  

92.    விருத்த இலக்கணம் :
 
வில் வாள் வேல் செங்கோல் யானை குதிரை நாடு ஊர் குடை
இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது.

93.    விளக்கு நிலை
வேலும் வேற்றலையும் விலங்காது ஓங்கியவாறு போலக்
கோலோடுவிளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு ஓங்குவதாகக் கூறுவது 
 
94.    வீரவெட்சிமாலை : 
சுத்த வீரன் மாற்றார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப்பூ
மாலை சூடி அவ்வண்ணம் போய் நிரை கவர்ந்துவரில், அவனுக்கு முன்பு
தசாங்கம் வைத்துப் போய்வந்த வெற்றி பாடுவது.

95.    வெற்றிக்கரந்தை மஞ்சரி :
பகைவர் கொண்ட தம் நிரை மீட்போர் கரந்தைப்பூ மாலை
சூடிப்போய்மீட்பதைக் கூறுவது.

96.    வேனில்மாலை :
வேனிலையும் முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடுவது.

*63-64


புதுப்பிக்கபட்ட நாள் : 23-05-2018 15:44:32(இந்திய நேரம்)