தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Swaminatham


v

மூன்று பிரதிகளுக்கும் உள்ள தொடர்பைக் கீழ்க்காணும் வரைபடத்தின் மூலம் தெளிவுபடுத்தலாம்.

ஆயினும் பாட வேறுபாடு, கருத்தமைப்பு வேறுபாடு, கருத்து வேறுபாடு, கோட்பாடு வேறுபாடு எவ்வாறு வந்தன என்ற கேள்விக்குப் பதில் கூற முடியாத நிலையில் இன்று நாம் உள்ளோம். இன்னும் பிரதி ஏதாவது கிடைத்தால் ஓரளவு விடை காண முடியும். வேறுபாடு மிகுதி காரணமாகவே இங்கு மூன்று பிரதியும் தனித்தனியே பதிப்பிக்கப்பட்டுள்ளன. க. த. பிரதியில் மட்டும் பாடவேறுபாடுகள் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும்.

2.பிரதிகளின் நிலை

பி. பொ. பிரதி மையினால் தெளிவான எழுத்தில் எழுதப் பெற்றிருக்கிறது. ஆயினும் ஆங்காங்கே சிறு அடித்தல் திருத்தல் காணப்படுகிறது. இன்னொருவர் படித்து திருத்தம் செய்தாரா, பிரதி செய்தவரே மறுமுறை படித்துத் திருத்தம் செய்தாரா என்பது தெரியவில்லை. பொதுவாக எழுத்துப்பிழைகள், ஏகார ஓகாரங்களுக்குக் கொம்பு சேர்த்தல், சொற்பிழை, செய்யுளில் வரிபிரித்து அறியக் கோடிடுதல் முதலிய திருத்தங்கள் காணப்படுகின்றன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:48:57(இந்திய நேரம்)