தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-Library


பொதுப்பாயிரம்
2
நூலின் தன்மை

1.
கடலின் மீன்பெயர் நுளையர 1 வாய் மொழியெனல் கடுக்கும்
திடம 2 நி லாவிய செழுந்தமிழ்ப் புலவரைச் சேர்வார்
புடவி 3 மேற்கொளும் அறுவகை இலக்கணப் புதுநூல்
படஅ ராஉறழ 4 சமணரைப் புகழ்ந்துளார் பகையே
(3)
வகையும் துணையும்

2.
எழுத்து சொல்பொருள் யாப்புஅணி எனத்திகழ்
இவற்றுடன் இவைதம்மாற்
பழுத்து மாமணம் கமழ்தரு புலமையும்
பகர்வது குறித்துள்ளேன்,
வழுத்தும் மங்கலம் அறியநீ யென்னது
வாக்கில்வந்து அருள்இன்னே; 5
கொழுத்து உலாவிய வரிஉடல் பூரம்மேல 6
கொண்டுள குலமாதே.
(4)
நுவன்ற காரணம்

செந்தமிழ்க் கிரியோன 7 தினந்தொறும் வழிபடும்
கந்தனைக் கதிர்வேற் கரத்துடன் மயில்மேற்

1.
பரதவர், மீனவர்.
2.
உறுதி.
3.
உலகம்.
4.
படம் விரிக்கும் பாம்பைப் போன்ற. (பல இலக்கண நூல்களை இயற்றிய சமணர்கள் அவற்றுள் தம் சமயக் கொள்கைகளைத் திணித்தமை பற்றி இவ்வாறு கூறினார்)
5.
இப்பொழுதே.
6.
பூரான். இதனைக் கலைமகளின் ஊர்தியாகச் சொல்வர்.
7.
அகத்தியர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:45:33(இந்திய நேரம்)