தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேறும் சேறும் என்றலின்


சேறும் சேறும் என்றலின்

325. நெய்தல்
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:55:03(இந்திய நேரம்)