தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புரிமட மரையான்


புரிமட மரையான்

317. குறிஞ்சி
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:03:21(இந்திய நேரம்)