தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதைப் புனம் கொன்ற


முதைப் புனம் கொன்ற

155. முல்லை
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்' என்னும் உரை வாராதே.
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:09:45(இந்திய நேரம்)