Primary tabs
"பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன்
மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன்
நல்லுருத் திரன்முல்லை நல்லந் துவனெய்தல்
கல்விவலார் கண்ட கலி"
என்னும் வெண்பாவாலும், 'புரிவுண்ட" (கலித். 142) என்பதன் உரையிலும், "உரிப்பொருளல்லன" (தொல். அகத். சூ. 13) என்பதனுரையிலும் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள வாக்கியங்களாலும் விளங்குகின்றன. ஆசிரியனென்பது கல்விச் சிறப்பாற் பெற்ற பெயர்.
திருவள்ளுவமாலையிலுள்ள "சாற்றிய பல்கலையும்" என்னும் வெண்பாவை இயற்றியவரும் இவரென்பர். மதுரை, திருப்பரங்குன்றம், இவற்றின் இடைவழி, வையையாறு, திருமருதந்துறையென்பவற்றின் இயற்கைகளையும், ஆங்காங்கு நிகழ்ந்த பலவகைச் செய்திகளையும் விளங்கக் கூறியிருத்தலால் இவருடைய ஊர் மதுரையென்றும், "கடன்முகந்து கொண்ட" (அகநா. 43) என்பதை இயற்றியவரான மதுரையாசிரியன் நல்லந்துவனா ரென்பவர் இவரேயென்றும் தோன்றுகின்றது.
2. இளம்பெருவழுதியார்:- திருமாலுக்குரிய 15-ஆம் பாடலை இயற்றியவர் இவர். இப்பாட்டில் எல்லா மலைகளுள்ளும் இருங்குன்றம் (திருமாலிருஞ்சோலைமலை) சிறந்ததென்று எடுத்துக் காட்டியிருக்கும் அழகும், சிலம்பாற்றால் அழகு பெற்றுள்ள அக்குன்றத்தின் வளமும் விரும்பி அதிலெழுந் தருளியிருக்கும் 1கண்ணபிரானும் பலதேவரும் உருவத்தால் இருவராயினும், தொழிலால் ஒருவரே யென்பதற்குக் கூறியுள்ள உவமைநயமும், அக்குன்றம் திருமால்போல்வது, தன்னைக் கண்டோருடைய மயக்கத்தை யறுப்பது, ஆதலால்,
கால அடைவில் பாய்ச்சல் மிகுதியால், அது கடலோடு கலத்தல் தவிர்ந்ததை நோக்கிப்போலும்.
1 கண்ணபிரானையும் பலதேவரையும் இங்ஙனம் சேர்த்து ஒருங்கு பாராட்டி யிருத்தலை இந்நூலிலுள்ள வேறுபாடல்களாலும் அறியலாகும்;
"வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப்
பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும்
பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித்
திருமறு மார்பன்போற் றிறல்சான்ற காரியும்,"