அச்சிரம் - முன்பனிக்காலம்
அடையல் - ஒருவகைச் செருப்பு
அணிகென - அணிந்து கொள்க என்று
அண்ணல் - ஆதிசேடன் (ப. தி.)
அந்தணர் அறம் - பார்ப்பனர்க்குரிய ஒழுக்கம்
அமரர் உண்டிமதி - அமரர் உணவாகிய திங்கள்
அமர்ந்ததை - எழுந்தருளிய திருப்பதி
அமர்ந்தோய் - எழுந்தருளியோய்
அமிர்தபானம் - அமிர்தம் போன்ற காமபானம்
அமையாப் புணர்ச்சி - விடமாட்டாத புணர்ச்சி
அம்பாவாடல் - தைந்நீர் ஆடல்
அம்பின் தொழில்வீற்றிருந்த நகர் - சிரமச்சாலை