அரத்தின்வாய் - அரத்தாற் கூர்மை
செய்யப்பட்ட
வாய்
அருச்சிப்போர் - அருச்சனை செய்வோர்
அருஞ்சனை - நிலைத்தலில்லாத சுனை
அருளில் அணங்கு - அருளில்லாத தெய்வம்
அருள்முருகு - அருளுடைய முருகன்
அருள் வயினால் - அருட்கூற்றினால்
அலர்தரு பக்கம் - வளர்பிறைப் பகுதி
அல்லல் - பசி முதலிய துன்பங்கள்
அல்லா - அல்லாந்து; மயங்கி
அல்லாநெஞ்சம் - அல்லாப்பையுடைய மனம்
அவியமர் அழல் - அவியிடப்பட்ட
வேள்வித் தீ
அவியாவிளக்கம் - அணையாத விளக்கு
அவிழ்ந்தமலர் - மலர்ந்தமலர்
அழிதவம் - கூடாவொழுக்கத்தால் அழிந்ததவம்
அளப்பரியவை - அளத்தற்கரியை
அறநீக்கி - துவரக்கெடுத்து