அறவோர் - பார்ப்பனர் (ப.தி.)
அறிந்தாய் - அறிந்திலை (குறிப்பு மொழி)
அறுவர் - கார்த்திகை மகளிர்
அறுவேறு துணி - ஆறாக வேறுபட்ட துண்டு
அன்னப் பெரும்பெடை - பெரிய பெண் அன்னம்
அன்னமனையார் - அன்னம்போன்ற மகளிர்
அன்னோர் - அப்படிப்பட்டவர்
அன்னை - அத்தன்மையினையுடையை
ஆதிரை முதல்வன் - உருத்திரன்
ஆயம் - கூட்டம்; சுற்றத்தார்
ஆய்கோல் - பூவாராய்ந்து பறிக்குங் கோல்
ஆய்மா - ஆராய்ந்து பூட்டிய குதிரை
ஆரத்து - சந்தனமரங்களை யுடைய
ஆராக்காமல் - நுகர்ந்து அமையாத காமவின்பம்
ஆராவுடம்பு - வளராத குழவியுடல்
ஆர்தருபு - தங்கிக்கிடந்து
ஆர்த்தும் - நுகர்விக்கும்
ஆல் - ஆரல்; கார்த்திகை மகளிர்