ஆறிருகை - பன்னிரண்டு கையிடத்தும்
ஆறு - செவிதோல் கண் நாமூக்கு மனம்
ஆகிய ஞானேந்திரியம்
ஆறுசெல்வளி - இயங்குங் காற்று
ஆற்றுப்படுத்த - வழிப்படுத்தின
இகந்தாளை - நீங்கிய தேவசேனையை
இடவல - இடமும் வலமும் ஆயினோய்
இட்டார்க்கு - பொருள்கொடுப்பார்க்கு
இணைப்பிணையல் - இரண்டனைப் பிணைத்தது
இயல்பிற்று - தன்மையுடையது
இயற்புலவ - இயலறிந்த புலவனே
இரவிருள் பகலாக - இரவினும் பகலினும்
இருங்குன்றம் - திருமாலிருஞ் சோலைமலை
இருநிழல் - இரண்டு குடைநிழல்
இருந்தையூர் - வையைக்கரையிலுள்ள ஒரு
திருமால் திருப்பதி (ப.தி.)
இருபிறப்பு - நூலணிதற்கு முன்னொரு பிறப்பும்
பின்னொரு பிறப்புமாகிய இருபிறப்பு