இருமைவினை - நல்வினை தீவினை
இரும்பனிக்கடல் - பெரிய குளிர்ந்த கடல்
இரும்பிடி - கரிய பெண் யானை
இருவர் - கண்ணனும் பலதேவனும்
இருவேறு மண்டிலம் - ஞாயிறுந் திங்களும்
இவ்வாற்றால் - இங்ஙனமாதலால்
இளநெல் - மூன்று திங்கள்
நீரினின்று விளையு நெல்
இளம்பார்ப்பு - இளங்குட்டி
இளிவரவு - ஈயென்னும் இழிந்த சொல்
இளையை - ஆண்டால் இளமையுடையை
ஈங்கூங்கு - இங்குமங்குமாக
ஈர்ஞ்சாந்து - குளிர்ந்த சந்தனம்
ஈர்வடி - பிளந்த மாம்பிஞ்சு
ஈன்றாட்கு - பெற்ற தாய்க்கு
உடம்படுவாரா - உடம்படும்படி