உடைபுலம் - தோற்றோடும் போர்க்களம்
உணாக்கால் - உண்ணாதொழியின்
உந்துவளி - தள்ளுகின்ற காற்று
உயர்ந்துழி - குறிஞ்சி நிலம்
உரமிலி - திண்மையில்லாதவன்
உருவத்தீ - அழகிய நெருப்பு
உருவம் - ஞானக் கண்ணாற் காணப்படும் வடிவம்
உரையோடிழிந்து - சொல்லுதற்றொழிலோடு சென்று
உவகையள் - களிப்பையுடையவள்
உழவர் - உழுதொழில் செய்வோர்
உள்ளீடு - அகத்திடப்பட்ட பொருள்
உறப்பூட்ட - இறுகப்பூட்டுதலாலே