ஒள்ளிழை - ஒளியையுடைய அணிகலன்
ஒன்பதிற்றிருக்கை - ஒன்பது நாள்களின் இருப்பிடம்
ஒன்றனூழி - வானந்தோன்றிய முதலூழி
ஒன்றாற்றுப்படுத்த - ஒருவழியிற் செலுத்திய
ஒன்று - ஆகாயத்தின் பண்பாகிய ஓசை
ஓரொத்து - ஒரு தன்மையாகப் பொருந்தி
ஓர்சொல் - ஒப்பில்லாத புகழ்
கடம்படுவோர் - பொருள்களை நேர்வோர்
கடம்பமர் செல்வன் - முருகக் கடவுள்
கடவுளவை - கடவுட்டன்மையையுடையை
கடவுள் ஒருமீன் - அருந்ததி
கடிமரம் - பூசனைக்குரிய கடப்ப மரம்
கடுஞ்சூர்மா - கொடிய சூரபதுமன்
கடும்புனல் - கடுகிப்பாயுநீர்
கண்டக்கரும்பு - கரும்புத்துண்டு
கண்டல் - தாழைமலர்: ஆகுபெயர்
கண்ணாது - நினையாமல் (ப.தி)
கண்ணாருஞ்செயல் - கண்ணிறைந்த அழகு
கண்ணியை - தலைமாலையினையுடையை
கதுவாய் - பற்றிக்கொள்வாய்
கமழ்முகை - மணக்கும் அரும்பு
கம்பலைத்தன்று - முழக்கிற்று
கயவாய் - குளத்தின்கண்ணுள்ள