கருங்கண் வெள்ளை - சங்கருடணன்
கருமுகக் கணக்கு - கரிய முகமுடைய
குரங்குத் திரளுக்கு
கரும்பின் - தொய்யிற் கரும்பினையுடைய
கருவல் கந்தம் - கரிய வலிய கழுத்து
கருவியர் - நீராடற்கருவிகளையுடையோர்
கரைச்சிறை - கரையாகிய அரண்
கலந்த - பகுத்துக் கொடுத்த
கலிழ்கடல் - புடைபெயருங்கடல்
கல்லறை - கல்லென்று ஒலிக்கும்
கழங்கு - ஒரு விளையாட்டுக் கருவி
(கழற்சிக்
காயுமாம்)
களிற்றியல் - ஆண்யானையின் தன்மை
கள்ளின்களி - கள்ளுண்டமையாலுண்டாகும் வெறி
காஅய் கடவுள் - அழிக்குங் கடவுள்; சிவன்
காதற்காமம் - அன்புடைய காமம்