காமக்கடவுள் - வழிபடுந்தெய்வம்
காமக்கணிச்சி - காமமாகிய கோடரி
காமங்கெடும் - காமம் பதனழியும்
காமவதுவை - காமநுகர்கின்ற திருமணம்
காமன்படை - மன்மதனுடைய சேனை
காரிகை மது - அழகாகிய தேன்
காரேற்றன்று - கார்ப்பருவத்தை மேற்கொண்டது
காரேற்று - கார்ப்பருவத்தை அடைந்து
கார்த்திகை - கார்த்திகை விண்மீன் - (ப.தி.)
கால்வழக்கு - காற்றியக்கம்
காணாமரப - அறியப்படாத மரபினோய்
கிழமை - ஆளத்தியின் றொழிலில் ஒன்று
கிளக்குங்கால் - கூறுமிடத்து
குணக்கு - குணத்தில் (ப.தி.)
குருக்கத்தி - மாதவிக்கொடி
குருதித்து - குருதியின் தன்மையுடைத்து
குல்லை - கஞ்சங்குல்லை (கஞ்சா)