குளவாய் - ஒரு திருப்பதி (ப-தி)
குறப்பிணா - குறப்பெண்; வள்ளி
குறவன் மகள் - வள்ளியம்மையார்
குறுந்தொடி - குறிய வளையல்
குன்றத்தான் - மலைமேலிருந்தான்
குன்றம் - பொதியில் (ப.தி.)
குன்றனையவை - குன்றினை ஒப்பை
குன்றுப்பயன் - களவுப்புணர்ச்சி
குன்றெதிர - மலை எதிரொலியெடுப்ப
கூடார் - ஆண்டுச் செல்லாதார்
கூரெயிற்றார் - கூரிய பற்களையுடைய மகளிர்
கூறும் - இசையைக் கூறுகின்ற
கெடுவளை - காணாமற்போன வளையல்
கேளிர் மணல் - கேளிரை ஒத்த மணல்
கைக்கிளைக் காமம் - ஒருதலைக்காமம்
கைபுனை - சிற்பத்தொழிலாலே இயற்றிய
மைம்மாறுவார் - தம்பாற் கொள்வார்
கைவளை - கையிலிடும் வளையல்
கொஃறகை - கொல்தகை - கொல்லப்படுந்தன்மை