கொடித்தேரான் வார்த்தை - தமிழ் (ப.தி.)
கொடியிணர் - நீண்ட பூங்கொத்து
கொடியேற்றுவாரணம் - கொடியேற்றுதற்குரிய
யானை
கொட்டை - தாமரைப் பொகுட்டு
கொம்பர் - பூங்கொம்பு போன்ற பெண்
கொள்ளும் கருவி - இந்திரியம்
கொன்றுணல் - கொன்றுதின்னல்
கோட்டினர் - கொம்பினையுடையோர்
கோதையின் - மாலையை ஒத்த நின்னைப்போல
கோலங்கொள் - ஒப்பனையாம் பொருட்டு
கோள்இருள் - கண்ணைக் கொள்கின்ற இருள்
கோவல - பசுக்களைக் காத்தல் வல்லவனே
சமம் - இசைஇயக்கத்துள் ஒரு நிலை (மத்திமம்)
சாரிகை - யானை முதலியவற்றின் செலவு
சாவாமரபின் - சாவாத்தன்மை போல