சிந்திக்க - நினைக்குமளவில்
சிலம்பாறு - பாண்டியநாட்டின்கண் ஒரு யாறு
சிவிறி - நீர்வீசுந் துருத்தி
சிறந்தது - சிறந்ததொரு பொருளை
சிறந்தன்று - பொருந்திற்றிலை
சிறந்தார் - தொழிலிற் சிறந்த பாகர்
சிறந்தோருலகம் - தேவருலகம்
சிறப்பினுள் - நல்வினையாலே
சிறப்புணா - சிறந்ததோர் உணவு
சிறப்போய் - சிறப்பினையுடைய நீ
சிறுகிடையோர் - சிற்றிடையையுடைய மகளிர்
சிறைபிடித்தாள் - சிறையாகப் பிடித்தாள்
சிற்றடிசில் - விளையாட்டிற்குச்
சமைத்த உணவு
சீப்பின்னது - சீத்துவந்தது
சீர்த்து - சிறந்து (ப.தி.)
சீரடியவர் - சிறந்த கடவுளடியவர்
சுட்டவும் - கையாற் சுட்டி வினவும்
சுரத்தல் - கொடுக்கக் கொடுக்கப்
பொருள் வளர்தல்
சுருக்கமும் - சுருங்குதலும்
சுருங்கை - குழாய் (துருத்தி)