செம்பஞ்சி - அலத்தகக் குழம்பு
செம்பூம்புனல் - சிவந்த அழகிய புதுநீர்
செம்மற்று - சிறப்பினையுடையது
செய்குறி - எண்குறித்திட்ட
செய்பொருள் - செய்த அறம் பொருளின்பம் வீடு
செய்யாள் - திருமகள் (ப-தி)
செய்யை - சிவந்த நிறமுடையை
செவிசார்த்துவோர் - சொல்லுவோர்
செறிநகை - செறிந்த பல்லினையுடைய தலைவி
சேஎய்ச் சேய்த்து - மிகவும் தூரியது
சேட்சிமை - உயர்ந்த சிகரம்
சேணிகந்து - தொலைதூரங் கடந்து
சேமத்திரை - பாதுகாவலாகிய திரைச்சீலை
சேறாடுபுனல் - சேறுபட்ட நீர்
சேறாடுமேனி - சந்தனம் பூசிய உடம்பு
சேறு - சந்தன முதலியவற்றின் குழம்பு
ஞாயிற்றேர் - ஞாயிற்றினது எழில்