ஏமநீர் - உலகிற்குப் பாதுகாவலான நீர் (ப.தி.)
ஏழுறுமுனிவர் - சப்தரிஷிகள்
ஏழ்புழை - ஏழுதுளையுடைய குழல்
ஏறுமாறு - பகை; ஓருலக வழக்கு
ஐந்தலை அரவம் - ஐந்துதலையுடைய பாம்பு
ஐந்தனுள்ளும் - ஐம்புலத்துள்ளும்
ஐந்திருள் - ஐம்பொறியானும் உண்டாகும் மயக்கம்
ஐந்து - ஓசையும் ஊறும் ஒளியும் சுவையும் நாற்றமும்
ஐம்புழை - ஐந்து துளையுடைய குழல்
ஐயர் - பார்ப்பார் (ப.தி.)
ஐயிருநூற்று மெய்ந்நயனத்தவன் - இந்திரன்
ஐவளம் - ஐந்துவகை வளம். அவை "அரக்கு இறலி
அணிமயிலின் பீலி திருத்தகு நாவியோடு ஐந்து"
ஐவிரைமாண்பகழி - ஐந்தாகிய மலரம்பு
ஐவர் - செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
ஆகிய ஐந்து கோள்கள்
ஒசிபண்ப - முறிந்த அன்புடையோனே
ஒண்மயில் - ஒளியுடைய மயில்
ஒருநிலைப் பொய்கை - வற்றாத நீர் நிலை
ஒருமையோடு - ஒரு பகுதியினாலே
ஒள்ளிணர் - ஒளியுடைய பூங்கொத்து