தாழ்வுழி - விரும்பின இடம்
தாளிடீஇ - காலிலிட்டுக்கொண்டு
தாளிணையவை - தாளிணையையுடையை
தானையான் - படையினையுடையோன்
திசைநாறிய - திசையெங்கும் பரந்த
திணிநிலம் - மண்திணிந்த பூமி
திரிதர்வாய் - திரும்புவிடத்து
திரித்திட்டோன் - சேதித்தான்
திரிநரும் - திரிவாரும் (ப-தி)
திரிய - திரித்து; சுழற்றி
திருமருத நீர்ப்பூந்துறை - வையையின்கண் ஒருதுறை
திருமருதமுன்றுறை - வையையாற்றின்கண் ஒருதுறை
திருவரை - திருப்பரங்குன்றம்
திருவரையகலம் - அழகிய மலையை யொத்த மார்பு
திரைமூழ்கி - அலையிலே முழுகி
தின்னும் - துன்புறுத்தும்
தீ எரி - தீக்கும் நெருப்பு
தீரும்பிணியாள் - பிணிதீர்ப்பவள்
துணை இல்லம் - இரண்டாகிய வீடு
துருத்தி - யாற்றிடைக் குறை
துவர் - பத்துவகைத்துவர் (மணப்பொருள்)
துளவினவை - துளவமாலையினையுடையை
துளும்பும் - தளும்பாநின்ற