துன்னித்துன்னி - அடுத்தடுத்து
தூங்குமணி - தொங்குகின்ற மணி
தெரிமணி - ஆராய்ந்தெடுத்த மணி
தெறுகதிர்க்கனலி - சுடுகின்ற கதிரையுடைய மழு
தென்றல் - தென்றிசைக் காற்று
தென்னவர் - பாண்டிய மன்னர்
தைந்நீராடுதல் - தைத்திங்களின் நீராடல்
தொண்டு - ஒன்பது; மூலப்பகுதி
தொழிலின் - படைத்தல் முதலிய
முத்தொழில் காரணமாக
தொழுகல்லீர் - தொழமாட்டாதீர்
தொழுதகை யமைதியின் - கூப்பிய கையினது
அமைதியில்
தோழம் - ஒருகால அளவை (ப-தி)
தோற்றுதும் - தோன்றுவிப்பேம்