நகை: ஆகுபெயர் (வெட்சி) 13-59
நகைசான்ற - சிரிப்புப் பொருந்திய
நக்கலர்துழாய் - சிரித்து மலரும் துளசி
நடு - உட்பொருள்;அந்தரியாமி
நட்டவன் - நட்புச் செய்தவன்
நட்டோர் - நட்புச் செய்தோர்
நணிநணித்து - மிகவும் அண்மையது
நயத்தகு - விரும்பத் தகுந்த
நரம்புளர்நர்- யாழ்நரம்பினை வருடுவோர்
நளிபுனல் - குளிர்ந்த நீர்
நனியுணர்ந்து - நன்றாக அறிந்து
நன்கிடைத்தேர்- நல்ல நெட்டியாற் செய்த தேர்
நாகர்நகர்- ஆதிசேடனார் கோயில் (ப-தி)
நாஞ்சிலவை- கலப்பையினையுடையை
நாலெண்தேவர்- நால்வகைப் பட்ட
எண்ணினையுடைய
தேவர்.
அவராவார் முப்பத்து மூவர்
நால்வகையூழி- நான்குவகை யுகங்கள்
நாவலந்தணர்- நாவன்மையுடைய சான்றோர்
நாவலந்தண்பொழில் - நாவலந் தீவு