தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்னுரை




முன்னுரை

சங்ககாலச் சான்றோர்கள் அவ்வப்போது பாடிய புறத்திணைக்குரிய
பாட்டுகளுள் நானூறு பாட்டுகளைத் தேர்ந்து, பண்டைநாளைச் சான்றோர்
ஒருவரால் தொகுக்கப்பெற்றது, இப் புறநானூறு என்பது உலகறிந்த செய்தி.
இதன் முதல் இருநூறு பாட்டுகள் ஒரு பகுதியாக முன்பு வெளியிடப்பெற்றன;
இப்போது 201 முதல் 400 பாட்டுகள் கொண்ட இரண்டாம் பகுதி
வெளிவருகின்றது.

இப்புறநானூற்றின் சிறப்பும், இதன்பால் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்
அன்பும் மதிப்பும் இந்நூற்கண் அடங்கியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளின்
மாண்பும், முதற்பகுதியின் முன்னுரைக்கண் சிறப்பாக எடுத்துரைக்கப்
பெற்றுள்ளன. இம் முன்னுரைக்கண் இவ் வெளியீட்டுக்கு அடிப்படையாய்
நின்ற குறிப்பைத் தெரிவிப்பது முறையென்பது பற்றி அதனைச் சுருங்க
உரைக்கின்றாம்.

சுமார் இருபத்தைந்து யாண்டுகட்கு முன், யான் கரந்தைப் தமிழ்ச்
சங்கத்தில் இருந்து தமிழ்த் தொண்டாற்றியபோது, தஞ்சை சில்லா
அரித்துவாரமங்கலத்துக்கு அண்மையிலுள்ள பள்ளியூர் என்னும் சிற்றூர்க்கு
என் நண்பதொருவருடன் சென்றிருந்தேன். அங்கே கிருட்டிணசாமி
சேனைநாட்டாரென்ற தமிழாசிரியரொருவர் வாழ்ந்து வந்தார். அவர்பால்
தொல்காப்பியத்து எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணருரை யொன்று இருந்தது.
அதனைப் பிரதிபண்ணிக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தால்
அவ்வூரிலேயேயான் சில நாட்கள் தங்கினேனாக, எனக்கும் அவருக்கும்
நட்பு முதிர, அவர்

வாயிலாக அரித்துவாரமங்கலத்தில் வாழ்ந்த தமிழ்ச் செல்வரும் அரிய
புலவருமாகிய திரு. வா. கோபாலசாமி ரகுநாதராசாளியார் அவர்களையும்
அவர்பால் நட்புற்றிருந்த பின்னத்தூர், திரு. அ. நாராயணசாமி ஐயர்,
கோழவந்தான், திரு. அரசஞ்சண்முகனார் முதலிய பல புலவர்களையும் பற்றிப்
பல செய்திகளைக் கேட்டு மகிழும் வாய்ப்புடையனானேன். அவ்வாறிருக்கையில்,
ஒருநாள் யான் திரு. டாக்டர். உ.வே. சாமிநாதையர் வெளியிட்ட புறநானூறு
இரண்டாம் பதிப்பு ஒன்றைப் புத்தம்புதிதாக வாங்கிச் சென்றேன். அதனைக்
கண்டதும் சேனைநாட்டாரவர்கள் ஒரு செய்தியைத் தெரிவித்தார்கள். திரு.
இராசாளியார் அவர்கள் பால் புறநானூற்று ஏடு ஒன்று இருந்ததாகவும், அதனை
ஒரு கால் தம்மிடம் தந்து திருத்தமாகப் படியெடுக்குமாறு பணித்ததாகவும்,
அதனைத் தாம் அழகாக எழுதிவைத்திருப்பதாகவும், என்னிடம் செல்லிச் சில
நாட்களுக்குப் பிறகு அக் கைப் பிரதியையும் காட்டினார். அப் பிரதியையும்
அச்சாகியிருந்த புறநானூற்றையும் ஒப்புநோக்கியதில் முற்பகுதியில் வேறுபாடுகள்
மிகுதியாகக் காணப்படவில்லை; பின்னர் 200 பாட்டுகட்கு



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:35:08(இந்திய நேரம்)