தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai-திருக்குறள் வட சொற்கள்

3. திருக்குறள் வடசொற்கள்.

திருக்குறளிலுள்ள வடசொற்கள் பின்வருமாறு நால்வகைப்பட்ட பதினேழாம்.

(1). வடநாட்டுச்சொல்:

ஆதி,இந்திரன்.

ஆதி என்பது தொடக்கம் என்று பொருள்படுவது; பெண்பாற்பெயராயின் ஆதன் என்பதன் பெண்பால் வடிவாம். அது தூயதென்சொல்.அதுவன்று இங்குள்ளது.

இந்திரன் என்பது வட இந்தியத் திரவிடர் வேந்தன் என்னும் மருதநிலத் தமிழ்த் தெய்வத்திற்கு வழங்கிய பெயர். இத்தெய்வமும் இச்சொல்லும் மேலையாரியத்தில் இல்லையென்று மாக்கசு முல்லர் கூறியிருதுப்பது கவனிக்கத்தக்கது.

(2). தமிழ்த்திரிசொல்:

அமரர், காரணம், பாக்கியம், வித்தகர்;

அல்-அ. மடி-மரி-மரன்-மரர். அ+மரர்=அமரர்(வ,). மரி - L.mori, ம்ரு(இ.வே.), கருத்தல்= கைகருக்குமாறு வினைசெய்தல்.இவ்வினை இன்று வழக்கற்றது. கரு-கருவி. கரு- கரணம்= செய்கை, செய்யுங் கருவி. கரணம்-காரணம் (வ).

பகு-பாகு-பாக்கு=பகுதி,நற்பகுதி,நற்பேறு பாக்கு+ இயம்(ஈறு)= பாக்கியம்.

விழித்தல்=கண்திறத்தல், பார்த்தல், காணுதல், அறிதல்.விழி=பார்வை, கண், அறிவு, ஓதி (ஞானம்).

விழி=விடி(இலத்.)- வித்(வ.)-வித்தகம்-வித்தகன்- வித்தகர். சமற்கிருத அகரமுதலி விதக்த (vidagdha) என்று மூலங்காட்டும். இவற்றின் விரிவையும் விளக்கத்தையும் என் வடமொழி வரலாற்றுட் கண்டுகொள்க.

(3). மேலையாரியச்சொல்:

அந்தம், அன்னம், நாமம்.

OE ende, E end, OS endi OHG enti, ON endir,Goth andeis, IA அந்த OE garna, OHG ganazzo, RV ஹம்ஸ-அன்னம்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:09:50(இந்திய நேரம்)