Primary tabs
ஒருசில சொற்கள் தூயதென் சொல்லாயினும், வடமொழி வெறியரான தமிழ்ப் பகைவரால் வடசொல்லொடு தொடர்பு படுத்தப் படுகின்றன.
எ-டு:
தானை=சேனை,துணி,துணிக்கொடி பிடித்துச் செல்லும் படை.ஒ.நோ: தூசு=துணி,துணிக்கொடி, தூசு-தூசி=கொடிப்படை E colour=flagi: colours=regiment.
பார்ப்பான் பார்-பார்ப்பான்= நூல்களைப் பார்ப்பவன், அந்தணர் என்னும் வகுப்பில் இல்லறத்தான் , ஆசிரியன் அல்லது உவச்சனாகப் பணியாற்றுபவன், இச்சொற்கும் பிராமணன் என்னும் சொற்கும் இடைப்பட்ட தொடர்பு இயேசுக் கிறித்து என்னும் பெயருக்கும் கேசவக் கிருட்டிணன் என்னும் பெயருக்கும் இடைப்பட்டதே.
சிலர் பார்ப்பனன் என்னும் வடிவு பிராமணன் என்பதன் திரிபைக் காட்டு மென்பர். அவர் அறியார். அனன் என்னும் சாரியை கூடிய ஈறு, படர்க்கை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவானதே.
எ-டு:
பார்த்தன்று என்பது பார்ப்பனது என்பதன் தொகுத்தல். பார்த்து+அன்+அது=பார்த்தனது. அனது-அன்று(அன்+து).
OE nama. E name,OS, OHG namo, Goth namo,L.nomen, நாம (இ.வே.)
(4) சமற்கிருதச்சொல்: அவி (ஹவிஸ்), ஆகுலம், ஆசாரம், உல்கு, கணம் (க்ஷணம்), சலம் (வஞ்சனை). பாவம்-பாவி.