Primary tabs
கொண்ட அதிகாரங்களுக் கேற்ப மும் முதற்பொருளும் இந்நூலில் விரவி உரைத்திருக்கின்றன. இன்பப் பகுதிக்குரிய முதுமொழிகள் மிகச் சிலவே. அவையும் இன்பச்சுவையை விளக்குவனவல்ல. கார் நாற்பதும் ஐந்திணையும் முப்பாலும் (இன்னிலையும்) ஒழிந்த ஏனைக் கீழ்க்கணக்கெல்லாம் அறம்பொரு ளின்பங்களை இங்ஙனம் உரைப்பனவே. திருக்குறளிற் கூறிய சில பொருள்களை அம்மொழிகளையே பின்பற்றிக் கூறுதலின், இந்நூல் திருக்குறளுக்குப்பின் இயற்றியதென்பது துணிதலாகும்.
இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார் என்பவர். பழைய ஆன்றோர்கள், "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என இவரைச் சிறப்பித்துக் கூறுவர். கூடலூர் மலைநாட்டின் கண்ணது (மதுரையென்பர் சிலர்.) படிக்காசு புலவர் "ஊரார் மலிபுலியூர்கோட்ட நற்குன்றத் தூரிலுள்ள ‘தீராவளமலி பாக்கிழவோன்புகழ்சேக்கிழவோன்' காராளன் கூடற் கிழவோன் முதுமொழிக் காஞ்சிசொற்ற, வாரார் புரிசைக் கிழவோனும் வாழ்தொண்டை மண்டலமே" என இவரைத் தொண்டை மண்டலத்தினர் என்பர் : இவர் பெயர் புரிசைக்கிழவோன் என்பர். எட்டுத் தொகையுள் ஒன்றான ஐங்குறுநூறு தொகுத்தோர் இவரே. இவருடைய பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் குறந்தொகையில் மூன்றும் உண்டு.
----------------