தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Muthumozhi Kanchi-பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்



பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்

வனப்பிய றானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே அடிநிமிர் பின்றே.

என்னும் தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 236 - சூத்திரத்தின் உரை, "சிலவாக என்பது எண்ணுச் சுருங்குதல். மெல்லியவாய்ச் சிலவாய சொற்கள், எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடிநிமிராதென்றது ஐந்தடியின் ஏறாதென்றவாறு. தாயபனுவலோ டென்றது, - இலக்கணஞ்சொல்ல எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பமென்னும் மூன்று மன்றியும் வேறு இடையிடை தாய்ச் செல்வது என்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கு எனவுணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம் பொரு ளின்பமென அவற்றுக்கு இலக்கணங்கூறிய பாட்டுப் பயின்றுவருமாறும், கார் நாற்பது களவழி நாற்பது முதலாயின வந்தவாறும் கண்டுகொள்க" என்று உரைத்திருக்கின்றது.

அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொரு ளின்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்

(பன்னிருபாட்டியல்)

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

1. நாலடியார் - ஜைனமுனிவர்கள் இயற்றிய நானூறு வெண்பாக்களை யுடையது. பதுமனார் என்பவர் இவைகளை முப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 14:57:40(இந்திய நேரம்)