Primary tabs
நாககுமார காவியம்
(சூளாமணிப்பதிப்பு1889- பதிப்புரை,பக்.3)
இப்
பதிப்புரைப் பகுதியால் ஐஞ்சிறு காவியங்கள் இன்னின்ன என்பது தெரியவரும். ஏட்டுப்
பிரதிகளில் சூளாமணிக் காவியத்தை எழுதுமிடத்து ‘இரண்டாவது’ என்னும் எண்குறிப்பு இருப்பது
கொண்டு இதனை ஐஞ்சிறு காவியத்துள் இரண்டாவது எனவும் இவர் கருதுகிறார்.
நீலகேசி தவிர ஏனைய காவியங்களின்
பிரதிகள் இவருக்குக் கிடைத்திருந்தன என்பது இப் பகுதியால் வெளியாகிறது. இவர்தம்
ஆய்வுரையைக் கொண்டே முற்பட இலக்கிய வரலாறு எழுதிய பூரண லிங்கம் பிள்ளை முதலியோரும்
ஐஞ்சிறு காவியம் என்னும் தொகுதி பற்றி விளக் கம் தந்துள்ளனர்.
(தமிழ் விடுதூது 52-53)
எனத் தமிழ விடுதூது நூலுள் ‘பஞ்சகாப்பியம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர்.உ. வே. சாமிநாதையர் அவர்கள், ‘பஞ்சகாப்பியம்-சீவகசிந்தாமணி முதலிய ஐந்து நூல்கள்’ என்றும், ‘பெருங்காப்பியம் என்றது சூளாமணி, கம்ப ராமாயணம் முதலியவற்றை’ என்றும் விளக்கம் தந்துள்ளார்கள். எனவே, ஐஞ்சிறு காப்பியத்துள்ஒன்றெனத்