Primary tabs
பொருண்மிசை விரிந்த ஞானம்
அப்பொருள் வழாத நூலி
னருந்தகை யொழுக்கந் தாங்கல்
இப்பொரு ளிவைகள் கண்டா
யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு
கடைப்பிடி கனபொற் றாரோய்"
வுலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
வளியார வுலகநீ யாள்கின்றா யென்கோ
வமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்க லாமே"
இனி இவ்வாறு நூல்பயில்வோர் உளத்தே அங்கங்கே மெய்யறிவினை வித்திச் செல்லும் இப்புலவர் பெருமான் நகை முதலிய எண்வகைச் சுவைகளும் இடந்தோறும் பொதுளும்படி வரலாற்றினைக் கூறிச் செல்லும் அழகும், கதை உறுப்பினர்கள் தத்தம் தகுதிக்கேற்பச் சொல்லாட்டம் நிகழ்த்தும்படி செய்யும் சூழ்ச்சியும் பெரிதும் இனியவாம். வித்தியாதர வேந்தனாகிய சடிமன்னன் தன் மகளாகிய சுயம்பிரபையின் மணப் பருவம் கண்டு இவளை இவளுக்கேற்ற கணவனோடு கூட்டுவித்தல் வேண்டுமே