தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| Choolamani |


பாட வேறுபாடுகளைப் பெருமுயற்சி செய்து குறித்து வைத்திருந்த சுவடியினைத் தந்துதவிய பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரவர்கட்கும் கழகத்தார் நன்றி உரித்தாகுக.

இச்சூளாமணி 'நாட்டுச் சருக்கமுதல் முத்திச் சருக்கம் ஈறாகப் பன்னிரண்டு சருக்கங்களைக்கொண்டது. 2,131 பாட்டுக்களையும் கொண்டு விளங்குகின்றது. இந்நூலை இரண்டு பகுதிகளாக வெளியிடுகின்றோம். முதற் பகுதியின்கண் நாட்டுச் சருக்கம் முதல் கல்யாணச் சருக்கம் முடிய எட்டுச் சருக்கங்கள் அடங்கியுள்ளன. இரண்டாம் பகுதியின்கண் அரசியற் சருக்கம் முதல் முத்திச் சருக்கம் முடிய நான்கு சருக்கங்களும் செய்யுள் முதற்குறிப்பகரவரிசையும் அருஞ்சொல் அகரவரிசையும் அடங்கியுள்ளன.

இந்நூல் முதன் முதல் 1889-இல் ராவ் பகதூர், சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் பதிப்பித்துள்ளனர். 1954இல் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் நூல்நிலையத்தின் வெளியீடாக வெளிவந்துளது. இவ்வெளியீடு குறிப்புரையோடு கூடியது. இந்நூலின் காலவாராய்ச்சி தேவார காலத்திற்குப் பின் பத்தாம் நூற்றாண்டென்று முன்னுள்ளோர் கூறியதே ஏற்புடைத் தென்ப.

இந்நூல் வெளியீட்டுச் செலவுத்தொகையில் ஒருபகுதி மத்திய அரசின் அறிவியலாராய்ச்சி பண்பாடு செய்தித்துறை அமைச்சரால் நன்கொடையாக வழங்கப் பெற்றிருக்கிறதென்பதை நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனைச் செந்தமிழன்பர்களும் ஆசிரிய மாணவர்களும் வாங்கிக் கற்றுப் பயனெய்துவார்களாக.

 

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:45:07(இந்திய நேரம்)