"...நீடுந், திருவோத்தூ ராண்பனையைப்
பெண்பனை யாகென்னும்
பெருவார்த்தை தானுடைய பிள்ளை....."
15. எலும்பு பெண்ணாக்கியது - (திருமயிலை)
2-ம் திருமுறை:- பிள்ளையார்
".......அட்டிட்டல் காணாதே போதியோ
பூம்பாவாய் " (1)
பதிகப் பாட்டுத்தோறும் " காணாதே போதியோ
பூம்பாவாய்" என்று வரும் மகுடங்களின் வகை
காண்க.
11-ம் திருமுறை:- நம்பியாண்டார்
நம்பிகள்
".........வெய்யவிடம்,
மேவி யிறந்தவயில் வேற்கண்
மடமகளை
வாவேன் றழைப்பித்திம் மண்ணுலகில்
வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான்
......"
- ஆளு. பிள். - திருத்தொகை
16. திருமணத்தில் வந்தாருடன் சிவனைச் சேர்ந்தது
3-ம் திருமுறை:- பிள்ளையார்
"...... இன்று நல்லூர்ப்
பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே"
(8)
- அந்தாளிக் குறிஞ்சி - நல்லூர்ப் பெருமணம்
இதனுள் பிள்ளையார் முத்தி விண்ணப்பம்
செய்தருளியமை தெளியப்படும்.
11-ம் திருமுறை:- நம்பியாண்டார்
நம்பிகள்
"வாரங் கணைபொழிற் காழிக் கவுணியர்
தீபனல்லூர்ச
சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்
சிவபுரத்து
வாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும்
போ துவந்தார்
ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லாலவ்
வரும்பதமே"
ஆளு. பிள். - திருவந்தாரி - 60
"விடந்திளைக்கும் மரவல்குல்
மென்கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைக்குங் கொங்கை புல்கிய
மன்மதன்...."
மேற்படி - சண்மை விருத்தம் - 10
".....முத்தமிழ்நூ லெல்லா
முழுதுணர்ந்த பிள்ளையார்க்
கொத்த மணமி துவென் றோதித்
தமர்க்ளெல்லாஞ்
சித்தங் களிப்பத் திருமணஞ்செய்
காவணத்தே
யற்றைப் பொழுதத்துக் கண்டுடனே
நிற்கப்
பெற்றவர்க ளோடும் பெருமணம்போய்ப்
புக்குத்தன்
அத்த னடியே யடைந்தா னழகிதே"
குறிப்பு:- யாழ்மூரிப் பதிக வரலாறும்,
திருநீலநக்கர், திருமுருகர், சிறுத்தொண்டர்,
திநீலகண்டப் பாணர் முதலியோர்க்குத் தோழமை
யீந்தருளிய வரலாறும் முதலாயினவும்
நம்பியாண்டார் நூல்களின் ஆதரவு பெறுகின்றன.
இப்புராணத்துக்கு வகை நூலாய் விளங்கியது
நம்பியாண்டார் நம்பிகளது திருத்தொண்டர்
திருவந்தாதியாகும். இதனுள்ளே ஆளுடைய பிள்ளையார்
புராணத்துக்குப் பேராதரவாய் நிற்பன அவர்பால்
வழிமொழி பெற்ற இநம்பிகள் பிள்ளையார்மேற்
பாடியருளிய திருவந்தாதி முதலிய நூல்களாகும்.
இவற்றையெல்லாம் உட்கொண்டே ஆசிரியர் "நங்க
ணாதனாம் நம்பியாண் டார்நம்பி, புந்தி யாரப்
புகன்ற வகையினால், வந்தவாறு...." என்று
தொடக்கத்துப் போற்றியருளினர் என்க.