சந்தனத் தாதியார் - 3696. திருவெண்காட்டு நங்கையாரின் தாதியார்.
சரவணத்துத் தனயர் - 3743. முருகப்பெருமான்.
சாக்கிய நாயனார் - 3636. (63) நாயன்மார்களுள் ஒருவர். புறச்சமய வேடத்தைத் துறவாதே
சிவனடிமைத் திறத்துள் நின்றவர்.
சிங்கடியார் - வனப்பகையார் - 3192. கோட்புலியாரின் திருமகளிர்; இவர்களை ஆளுடைய
நம்பிகள் மகண்மையாகக் கொண்டருளினர்.
சிறப்புலியார் - 3653. (63) நாயன்மார்களுள் ஒருவர்.
சிறுத்தொண்ட நாயனார் - 3659. (63) நாயன்மார்களுள் ஒருவர்.
சீராளதேவர் - 3676. சிறுத்தொண்ட நாயனாரது திருமைந்தர்.
சோமாசி மாறர் - 3629.(63) நாயன்மார்களுள் ஒருவர்.
ஞாயிறு கிழவர் - 3361.சங்கிலி அம்மையாரின் தந்தையார்.
ஞாயிறு - 3361. சங்கிலியம்மையார் அவதரித்து வளர்ந்த பதி. தொண்டை நாட்டில் திருவொற்றியூருக்கு
அணிமையில் உள்ளது. தலவிசேடக்குறிப்புப் பார்க்க.
தண்டகமாந் திருநாடு - 3326, திருத்தொண்டை நன்னாடு.
தண்டியடிகள் - 3592. (63) நாயன்மார்களுள் ஒருவர்.
திருக்கச்சூர் - 3328. தொண்டை நாட்டு 26-வது பதி.
திருக்கழுக்குன்றம் - 3326. தொண்டை நாட்டு 28-வது பதி.
திருக்காஞ்சி - 3337. காஞ்சிபுரம். தொண்டை நாட்டு முதற்பதி.
திருக்காமக் கோட்டம் - 3344. காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மையார் தவஞ் செய்தமர்ந்து
அறம் வளர்த்தருளும் தனித் திருக்கோயில்
திருக்காளத்தி - 3349. தொண்டை நாட்டுப் பெரும் பதி. 19-வது பதி.
திருக்குளம் - 3283. கமலாலயம் (திருவாரூர்).
திருக்கூடலையாற்றூர் - 3254. நடுநாட்டு 3-வது பதி.
திருச்சங்கமங்கை - 3637 - சாக்கிய நாயனார்அவதரித்த பதி. தொண்டை நாட்டில்
காஞ்சிபுரத்திற் கணிமையில் உள்ளது.
திருஞானசம்பந்தர் - 3308. சைவ சமய பரமாசாரியர் நால்வருள் முதலில் வைத்தோதப்
படுவர்.
திருத் தினைநகர் - 3322. நடுநாட்டில் 5-வது பதி.
திருத்தேவாசிரியன் - 3460. திருவாரூரில் கோயிலினுள் முன்புறம் திருத்தொண்டர் திருக்கூட்டம்
நிறைந்துறையும் திருக்காவணம். திருத்தொண்டத்தொகை அருளிய இடம்.
திருநாவலூர் - 3323. நடுநாட்டில் 8-வது பதி.
திருப்பருப்பதம் - 3352. வடநாட்டில் பாடல் பெற்ற பதி, இதனை நம்பிகள் திருக்காளத்தியிலிருந்தபடி
வணங்கிப் பாடியருளினர்.
திருப்பாண்டிக் கொடுமுடி - 3239. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று.
திருப் பெருமங்கலம் - 3155. சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்ப்பால் உள்ள பதி.
ஏயர்கோன் கலிக்காம நாயனாரது பதி.
திருப்பேரூர் - 3242. கொங்குநாட்டிற் சிறந்தபதி.
திருமகிழ் - 3402. திருவொற்றியூர்க் கோயிலினுள் உள்ள மூவாத திருமகிழமரம். சங்கிலி
யம்மையாரைப் பிரியாதிருக்க நம்பிகள் இதன்கீழே சபதஞ் செய்தனர்.