திருமுதுகுன்றம் - 3255. நடுநாட்டு 9-வது பதி. இங்கு இறைவர்பாற் பெற்ற 12000
பொன்னையும் நம்பிகள் திரு மணிமுத்தாற்றினிற் புகவிட்டுத் திருவாரூர்க் குளத்தில்
இறைவரருளாற் பெற்று எடுத்தனர்.
திருமாற்பேறு - 3349. தொண்டை நாட்டு 13-வது பதி.
வடதிருமுல்லைவாயில் - 3431. தொண்டை நாட்டு 22-வது பதி.
திருமேற்றளி - 3344. காஞ்சிபுரத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தனிக்
கோயில். தொண்டை நாட்டு 2-வது பதி.
திருமூலட்டானம் - (திருவாரூர்) 3279. திருவாரூர்ப் பூங்கோயிலில் புற்றிடங்
கொண்ட பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம்.
திருமூலதேவ நாயனார் - 3563. (63) நாயன்மார்களுள் ஒருவர். "நம்பிரான்
றிருமூலர்" என்று திருத்தொண்டத் தொகையுள் நம்பிகளால் விதந்து போற்றப் பெற்றவர்.
திருமந்திரமாலை 3000 அருளியவர்.
திருவதிகை வீரட்டானம் - 3569. நடுநாட்டில் 7வது பதி.
திருவரத்துறை - 3448. நடுநாட்டில் 1வது பதி.
திருவல்லம் - 3349. தொண்டை நாட்டில் 10வது பதி.
திருவன்பார்த்தான் பனங்காட்டூர் - 3347. தொண்டை நாட்டு 9வது பதி.
திருவாத்தி - 3700. திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத் திருக்கோயிலினுள்
உத்தராபதியார்எழுந்தருளிய ஆத்திமரம்.
திருவாமாத்தூர் - 3446. நடுநாட்டு 21-வது பதி.
திருவாரூர் - 3262. சோழ நாட்டுப் பெரும் பதி. ஆளுடைய நம்பிகளுக்குப் பெருக
அருளிய பதி.
திருவூறல் - 3437. தொண்டை நாட்டு 12வது பதி.
திருவெஞ்சமாக்கூடல் - 3246. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல்பெற்ற பதிகளுள்
ஒன்று. வெஞ்சன் என்ற சிற்றரசன் ஆண்டதனால் இப் பெயர்பெற்றது.
திருவெண்காட்டு நங்கையார் - 3676. சிறுத்தொண்டநாயனாரின் தேவியார்.
திருவெண்ணெய் நல்லூர் - 3338. ஆளுடைய நம்பிகளை இறைவர்ஓலைகாட்டி வழக்கிட்டு
ஆளாகக் கொண்ட பதி. நடுநாட்டில் 14வது பதி.
திருவெண்பாக்கம் - 3432. தொண்டை நாட்டில் 17வது பதி. நம்பிகளுக்கு இறைவர்
ஊன்றுகோ லருளிய பதி. இத்தலம் இப்போது பாண்டி (பூண்டி) நீர்த்தேக்க ஏரியினுள் அமிழ்ந்துள்ளது.
திருவேற்காட்டூர் - 3671. தொண்டை நாட்டு 23வது பதி. மூர்க்கநாயனாரது பதி.
திருவெற்றியூர் - 3353. தொண்டை நாட்டு 20வது. பதி. புவியுட் சிவலோகம்
போல்வது.
நிதிக்கோமான் - 3168. குபேரன்.
பரவையார் - 3280. ஆளுடைய நம்பிகளின் தேவிமா ரிருவருள் முதல்வர்.
பழையனூர்த் திருவாலங்காடு - 3436. தொண்டை நாட்டு 15வது பதி.
புலியூர் (தில்லை) 3264. சிதம்பரம்.
பூங்கோயில் - 3602. திருவாரூரில் இறைவரது கோயிலின் பெயர்.
பொதியமலை - 3565. தென்றிசையில் அகத்திய மாமுனிவர் எழுந்தருளியிருக்கும்
மலை. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று.
மூர்க்கநாயனார் - 3617. (63) நாயன்மார்களுள் ஒருவர்.