Primary tabs
இரண்டாம் பதிப்பிற்கு அருளியது
சிவமயம்
ஸ்ரீ தொண்டை மண்டலாதீனம்
“கயிலைப் புனிதர்” சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக
பரமாசாரிய சுவாமிகள் அவர்கள்
57, உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம் - 631 502.
ஆசியுரை
நாள் : 10-07-1991.
பூக்கையா லட்டிப் போற்றி என்னாத விவ் யாக்கை யாற் பயனென்
கால்களாற் பயனென் கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ்சூழாக் கால்களாற் பயனென்”
(அப்பர்)
மக்கட் சமுதாயம் இன்பமாக
வாழவேண்டுமானால் அனைவரும் பரந்த
மனப்பான்மையோடு பிறர் நலத்தைப்பேணி வாழ்வதைத் தவிர வேறு வழி
இல்லை. “நான்-எனது” என்னும் செருக்குகள் குறையக் குறைய உயிரினங்களை
அன்புடன் நேசிக்கும் பண்பு தோன்றும். இதனை நன்குணர்ந்த நம்
முன்னோர்கள், வாழ்க்கையோடு சமயத்தையும் இணைத்து வாழ்ந்து காட்டினர்.
இதன் பயனே இறையுணர்வு ஆகும்.
இறையுணர்வும், சிந்தனையும் மனித உள்ளத்தே அரும்பிடினும், அவை
மலர்தல் வேண்டுமன்றோ? அதற்காகவே வானளாவிய ஆலயங்களை
எழுப்பினர். தமிழ்நாட்டில் மட்டும் 35,000க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள்
இருப்பனவாகத் தெரிகிறது. இந்தச் சிறப்பு உலகில் வேறு எந்த நாட்டிலும்
காண முடியாத ஒன்று. இவைகளுள் திருமுறைப் பாடல்கள் பெற்ற
திருக்கோயில்களைப் பற்றிய விளக்கமே இந்நூலாகும்.
செல்லும் வழிதெரிந்தும், தலவிளக்கம் அறிந்து அவ்வத் தலங்களுக்குரிய
திருமுறைப் பாடல்களை ஓதியும், பிறர்