தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirumurai Thalangal-நான்காம் பதிப்பிற்கான நூன்முகம்

“திருமுறைத் தலங்கள்” என்னும் இந்நூல் அன்பர்களின் பேராதரவால்
மூன்றாம் பதிப்பாக வெளிவருகின்றது. இப்பதிப்பில், 275 தேவாரத்
திருமுறைத் தலங்களுடன் திருவாசக, திருவிசைப்பாத் தலங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில் “வழுவூர்” வீரட்டத் தலவிளக்கமும்,
வரை படங்களும் பிற குறிப்புக்களும் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. எனவே
திருமுறைத் தலங்கள் அனைத்திற்கும் சிறந்த, முழுமையான தல விளக்க
வழிகாட்டியாக கூடுதலான செய்திகளும், புதிய படங்களும், திருத்தப்பெற்ற
முகவரிகளும் பெற்று இந்நூல் புதிய பதிப்பாக அமைந்துள்ளது.

சிவதலயாத்திரைக்கு வரப்பிரசாதமாக விளங்குகின்ற இந்நூலின்
முன்பதிப்புக்களைப் பெற்று, யாத்திரை செய்து பயனடைந்துள்ள சமய
மன்றங்கள், நிறுவனங்கள், சபைகள், தனிப்பட்டோர் எண்ணிக்கை
அளவுக்கப்பாற்பட்டது.

“தங்கள் நூலைப் பின்பற்றி நன்முறையில், சரியான பாதையில்
அலைச்சலின்றிச் சென்று தலங்களையெல்லாம் விவரமறிந்து
வழிபட்டோம் ; தங்கள் பணி போற்றுதற்குரியது” என்று பாராட்டி
வந்துள்ள கடிதங்கள் அளவில.
மேலும் பலர் இந்நூல் வேண்டும் என்று
கேட்ட வண்ணமுள்ளனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே
இப்பதிப்பு வெளிவருகின்றது. 

பயனடைந்த நெஞ்சங்களுக்கும், பாராட்டிய அன்பர்களுக்கும்
எளியவனின் இதயமார்ந்த நன்றி.

ஜகத்குருவின் ஸ்ரீமுகம், கிடைத்திருப்பது என் பாக்கியம்.

எளியேனின் வேண்டுதலையேற்றுத் திருக்கோயிலின் நிழற்படங்களை
அன்புடன் அனுப்பியுதவிய ஆலய சிவாசாரியார்கள், அறங்காவலர்கள்
ஆகியோரின் ஒத்துழைப்பைப்போற்றி, அவர்கள் அனைவருக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகுற அச்சிட்டு வெளியிடும் வர்த்தமானன் பதிப்பகத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் என்றும் உரியன.

சமயத் துறையில் எளியவனை ஆளாக்கி, உடனாயிருந்து வாழ்வளித்து
வரும் என் குருநாதர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி


புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:40:57(இந்திய நேரம்)