Primary tabs
-
9. ஆத்மதாகம். கிறிஸ்து பெருமானிடத்தில் தான்
அடைந்த அருட்செல்வத்தைப் பிறரும் அடையவேண்டும்
என்னும் ஆசை வித்வானை மிகவும் அசைத்தாட்டியது.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தைப்
பிரசங்கிப்பது தமது கடமை என்று உணர்ந்தவராய், இவ்வித
ஊழியத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார். இதன்பொருட்டு
அவர் தனியாகவும் பிறரோடு சேர்ந்தும் சுவிசேஷத்தைப்
பிரசங்கித்து வந்தார். தன் வீட்டுக்கு அடிக்கடி வரும்
மாணாக்கர்களுக்கும் தன்னைக் காணவரும் நண்பர்களுக்கும்
ரக்ஷா பெருமானாகிய இயேசுநாதரைக் குறித்துப் பேசுவார்.
கல்வித்திறமையும் ஹிந்துமத அறிவும் மிகுதியாகவுடைய நம்
வித்வான் நடாத்தும் மார்க்க சம்பாஷணைகள் மெத்த ருசி
கரமாயிருக்கும். இவருடைய போதனைக்கும் சாதனைக்குமுள்ள
ஒற்றுமையைக் கண்டவர்கள் இவருடைய சம்பாஷணைகளையும்
உபதேசங்களையும் மிகவும் மதித்து வந்தனர்.
வித்வானுக்கிருந்த ஆத்மதாகத்தின் தன்மையையும்
பெருமையையும் ரக்ஷணிய யாத்திரிகத்துள் இரக்ஷணிய
நவநீதப்படலம் என்னும் பகுதியில் நன்கு காணலாம்.
இப்படலத்தில் கிறிஸ்துமார்க்கத்தின் சாரத்தை நூறு
விருத்தங்களால் கூறுகின்றார். இவ்விருத்தங்களில்
ஒவ்வொன்றும் ஜெகத்தீரே என்னும் மகுடத்தைக் கொண்டு
முடியும். திருஷ்டாந்தமாக:-
1 இதயக் கதவைத் தாள்செறித்திட் டிகபோகத்தில் இறுமாந்து
மதியற் றலகை நடித்திடமெய் மறந்து களித்து மகிழ்கின்றீர்
பதுமக் கரத்தால் தட்டியெம்மான் பலகால் பரிவோ டுமைக்கூவும்
மதுரக் குரல்வந் தெட்டலையோ வல்லேதிறமின் ஜெகத்தீரே.அன்பு மயமாம் திருமேனி அருளுக்குறையுள் திருநயனம்
இன்பு தரும்மெய்ச் சஞ்சீவி எழில்வாய் கனியும் திருவாக்கு
மன்பூ வுலகுக் கஞ்சலென வழங்கும் அபய வரதாஸ்தம்
துன்பேன் உமக்கிவ வெம்பெருமான் துணைதாள் தொழுமின்
ஜெகத்தீரே.
கசந்து பவத்தை உணர்ந்துசொரி கண்ணீர் திருமஞ் சனமாட்டி
இசைந்த ஜெபமா லிகைசூட்டி இதயபீடத் தினிதிருத்தி
அசைந்தி டாமெய் விசுவாச அன்பின் கிரியை நிவேதித்து
பசைந்த மனமோ டேசுதிருப் பதம்பூ ஜியுமின் ஜெகத்தீரே.சுவிசேஷ கைங்கரியத்தில் நமது வித்வான் தெருப்
பிரசங்கம் முதலான பொது முறைகளைவிட தனித்தனி
ஆட்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்காக உழைத்து
அவர்களுக்குப் படிப்படியாய் பாப உணர்ச்சியை உண்டுபண்ணி
பாப பரிகரணமார்க்கத்தைக் காண்பித்து இவ்விதமாய்
அவர்களைக் கிறிஸ்துவினுடைய பாதத்துக்குக் கொண்டு வரும்
முறைமையே அவர் மிகுதியாய் உபயோகித்து வந்ததாகத்
தெரிகிறது. வலை வீசி மொத்தமாய் மீன்பிடிக்கு முறை ஒன்று.
தனித்தனி மீன்களைத் தூண்டிலாலாவது வேறு
உபாயங்களாலாவது பிடிப்பது இன்னொரு முறை. இந்த
இரண்டாவது முறைமையே அவர் மிகுதியாக உபயோகித்தார்.
இந்த முறை அதிகச் சித்தியை உண்டுபண்ணக் கூடிய
முறையென்பது நிச்சயம். வித்வானுடைய ஆத்மதாகத்தைப்
பற்றியும், சுவிசேஷ கைங்கரியத்தில் அவர் உபயோகித்த
முறையைப் பற்றியும் கனம் உவாக்கர் ஐயர் எழுதிய ஒரு
நூலில் கூறப்பட்டிருப்பது நாம் நோக்கத்தக்கது
'திருநெல்வேலியிலே ஹிந்து குடும்பத்திலிருந்து கிறிஸ்து
சமயத்தைத் தழுவிய தமிழர் ஒருவர்