தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library

  • மனுஷரைப் பிடிக்கிறவர் என்று மிகப் பெரும் பெயர் பெற்றார்.
    மனுஷரைப் பிடிக்கும்பொருட்டே இந்து மாணக்கர்களுக்கு
    தமிழ் இலக்கணம் சம்பளம் வாங்காமல் படிப்பித்தார். இவர்
    இயற்கையாகவே மிக வினயமுடையவர். அவ்வினயத்தையும்
    மனுஷரைப் பிடிக்கும்பொருட்டே உபயோகித்தார். வாழ்நாள்
    முழுதும் அவரை ஆள்கொண்ட ஆசை ஒன்றே; அது
    மனுஷரைப் பிடிக்கவேண்டும் என்பதே. அப்படியே அவர்
    கடவுளுடைய கிருபையால் அநேகரைப் பிடித்தார். இன்று
    திருநெல்வேலிக் கிறிஸ்தவர்களுக்குள்ளே பிரபலமான சிலர்
    அவரது பிரயாசத்தின் பலனாய் வந்தவர்களே.' என
    வித்வானைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். இவரது சுவிசேஷ
    கைங்கரியத்தின் பலனாக கிறிஸ்துவைத் தங்கள் குருவாகவும்
    ரக்ஷகராகவும் ஏற்றுக்கொண்டு தங்கள் தங்கள் பூர்வ
    மதங்களைத் துறந்து ரக்ஷணிய சமயத்தைத் தழுவியவர்களுள்
    சிலருடைய நாமங்கள் இங்கெடுத்துரைக்கத் தக்கவை.

     
    திவான் பகதூர் A. S. அப்பாசாமிபிள்ளை அவர்கள்
    தாசில்தார் T. கதிர்வேல் நாயனார் அவர்கள்
    ஸ்ரீமான் E. இராஜப்பிள்ளை அவர்கள்
    ஸ்ரீமான் ஷண்முக சுந்தரம்பிள்ளை அவர்கள்
    ஸ்ரீமான் புன்னைவனம்பிள்ளை அவர்கள்
    ஸ்ரீமான் வரதராஜப்பிள்ளை அவர்கள்
    ஸ்ரீமான் பொன்னப்பிள்ளை அவர்கள்
    ஸ்ரீமான் கிருஷ்ணய்யர் அவர்கள்.

    இவர்களெல்லாம் ஹிந்து மார்க்கத்தில் உயர்ந்த ஜாதியில்
    பிறந்தோர். வித்வான் கிருஷ்ணபிள்ளையினுடைய நற்குண
    சீலத்தினால் கவரப்பட்டு, அவரது உபதேசத்தைக் கேட்டு,
    அதன் பலனாக இயேசு பெருமானைத் தங்கள் ஆன்மநாயகராக
    ஏற்றக்கொண்டவர்கள்.

    இவ்விஷயத்தில் நம் வித்வானுக்கிருந்த விசேஷ
    முயற்சியைப்பற்றி மிஸ் கார்மைக்கேல் மிசியம்மாள் கூறுவது
    நாம் கவனிக்கத்தகுந்தது:-

    'ஞானவான்களாகிய ஹிந்து சமய நண்பர்களையும் எளிதில்
    திருப்தியடையாத மானிடர்களையும் ஆதாயப்படுத்தும்
    வகையில் இவர் வரம் பெற்றிருந்தார். மனிதனைப் பிடிக்கிறவர்
    எனப் பேர்பெற்றிருந்தார். சிறிய மாணவர்களையும் ஆத்ம
    விசாரணையாளர்களையும் ஜாதிக்கட்டுக்குள்ளகப்பட்ட ஹிந்து
    சமயத்தவர்களையும் ஆதாயப்படுத்தினவர் இவருக்கு பின்
    ஒருவருமில்லை. பலர் இவரை அபிமானிக்கச் செய்வித்தது
    இவரது கல்வித்திறமை மட்டுமல்ல, இவரது குணாதிசயமும்
    முக்கியமாகும்.' என்று சொல்லுகின்றனர். ஆத்மதாகம்
    இவருடைய மனதில் அக்நி போல் ஜுவாலித்தது" என்று
    இவருடைய சரித்திரக்காரர் கூறுகின்றார்


    .     1 புதுக்கோட்டை P.S. கடம்பவன சுந்தரநாயனார்
    என்னும் பெயரையுடைய கிறிஸ்தவபக்தர் 1924 ஆம் வருடம்
    கிருஷ்ணபிள்ளையவர்களது ஜீவிய சரித்திரம் என்னும் சிறிய
    நூலை எழுதினார். இதற்குப் பாளையங்கோட்டை திவான்
    பகதூர் அப்பாசாமிபிள்ளையவர்களும் மதுராஸ் ஐக்கோர்ட்
    ஜர்ஜாகிய ஆனரபில் ஜஸ்டிஸ்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:19:44(இந்திய நேரம்)