Primary tabs
 M.O.H. Farook
 ember of Parliament. Lok Sabha
 Former Chief Minister of Pondicherry
 Former Union Minister Govt. of India
வாழ்த்துரை
எம்பெருமான் 
 அவர்களுடைய வாழ்க்கை மனித இனத்திற்கு வழிகாட்டி, 
 அவர்களுடைய வாழ்க்கையை மரபுக் கவிதைகளின் 
 வழியாக நண்பர் துரை-மாலிறையன் வடித்துக் காட்டியுள்ளது நல்ல
 முயற்சி. இப்பணியில் ஈடுபட்டு, இந்த அரிய நூலைப் படைத்து
 வெளியிடுவது மிகப் பெரிய தொண்டாகும்.
இத்தொண்டினை ஆற்றும் இவரையும், இவர்தம் துணைவியாரையும்
 பாராட்டுகிறேன். பல்வேறு பெரியவர்கள், நண்பர்கள், தோழர்கள்
 வெவ்வேறு கோணங்களில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் 
 என்னுடைய அருமை நண்பர் எடுத்திருக்கின்ற இந்த முயற்சி
 போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது.
உள்ளத்தைத் தொடுகின்ற தூய தமிழின் மூலமாகவும்,
 எம்பெருமானுடைய வாழ்வைக் கவிதை மூலமாகவும் சமைத்துக் 
 காட்டி உள்ளது என் உள்ளத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது. என்
 உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடுகிறேன் -
 கிடைக்கவில்லை.
இவர்களுக்கு நீண்ட ஆயுளையும் - நிறைந்த செல்வங்களையும்,
 அருளையும் வாரிக் குவிக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல 
 இறைவனை இறைஞ்சுகிறேன்.
வளர்க இவர்கள் தொண்டு - பாராட்டுகிறேன். நல்ல தூய
 பணிகளுக்குச் சாதி-மத-இன எல்லைகள் இல்லை என்பதற்கு இப்பணி
 ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர்
 பாராளுமன்ற மக்களவைஉறுப்பினர், புதுச்சேரி
 
 
						