தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருட் காவியம்


எம். எம். உசேன்

அரசு டவுன் காஜியார், புதுவை.

வாழ்த்துரை

எல்லாப் புகழும் சர்வ வல்லமையும் உள்ள அல்லாஹூத்த ஆலாவுக்கே
உரியது. ஸலவாத்தும், ஸலாமும் அவனுடைய திருத்தூதரும், நமது ரட்சகருமான
முகம்மது முஸ்தபா ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்,
அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக.

இதுவரை எண்ணற்ற நூல்கள் அண்ணலார் நபிகள் நாயகத்தைப் பற்றி,
உரை நடைகளாகவும், கவிதைகளாகவும் தோன்றிப் பலப்பலவாய்ப் பல்கிப்
பெருகி உள்ளன. அவற்றுள் ஏராளமானவை நமது மார்க்க அறிஞர்களாலும்,
கவிஞர்களாலும் எழுதிக் குவிக்கப்பட்டவையாகும்.

இதோ, புதுவைக் கவிஞர் துரை-மாலிறையன் அவர்கள் இந்து சமயத்தைச்
சார்ந்தவராக இருந்தாலும், பிற நெறிகளையும் மதித்துப் போற்றும் சமய
நல்லிணக்கம் கொண்ட கவிஞராவார். இவர் இதற்குமுன் அருள் ஒளி அன்னை
தெரேசா பற்றிக் காவியமும், அருள்நிறை மரியம்மை காவியமும், நேரு
காவியமும் படைத்து ஏறக்குறைய பத்தாயிரம் மரபுக் கவிதைகள் எழுதி
வெளியிட்டவர். இவர் எழுதிய பாவேந்தர் காப்பியம், அம்பேத்கார் காவியம்
ஆகிய இரண்டு நூல்களுக்கும் புதுவை அரசின் பரிசுகளைப் பெற்றவர்.
இவர் கிறித்தவ நெறிக்கும், கிறித்தவத் தமிழ் இலக்கியத்திற்கும் அருந்தொண்டு
ஆற்றியுள்ளவர்.

இப்போது இவர் படைப்பான சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் பெயரால் “இறை பேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்” என்னும்
இக்காவிய நூல் வெளிவருகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2017 18:04:02(இந்திய நேரம்)