Primary tabs
அண்ணல் நாயகத்தின் அரிய வாழ்க்கையை அருந்தமிழில்
பாடுக என்று
நான் அவரைக் கேட்டுக் கொண்டேன். அன்று ரமலான் நோன்பு தொடங்கும்
முதல் நாளாகும்.
நான் கேட்டுக்கொண்டதை அவரும், அவர்தம் துணைவியார்
திருமதி. சூரியவிசயகுமாரி அவர்களும் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்தார்கள்.
அவர்களுக்கு திருநபி சரித்திரம் என்னும் நூலையும் திருக்குர்ஆன் திருமறை
மொழிபெயர்ப்பு நூலையும் தந்து அனுப்பினேன்.
அவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உழைத்து
அரும்பாடுபட்டு
அண்ணல் நாயகத்தின் அரிய இறை பணிகளை 2600 பாடல்களில் காவியமாக
ஆக்கித் தந்துள்ளார்கள். இது இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க
ஒரு வரலாற்றுச் செய்தியாகும். இக்காவியம் இஸ்லாமிய நெறியின் அடிப்படைகளைக்
கொண்டு எழுதப்பட்டுள்ளது. இலக்கியச் சுவை உணர்வும் - இனிய நடையும்
கொண்டு படிப்போர்க்கு மேலும் மேலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்னும்
ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. இக்காலத்தில் இத்துணை அளவில்
மரபு கவிதைகளை எழுதிக் காவியம் படைக்கிற திறன் சிலரிடமே உண்டு.
அவர்களுள் இவர்கள் இருவரும் தமிழுக்குத் தொண்டாற்றுவதில் தலை சிறந்து
விளங்குகிறார்கள். இவர்கள் மேலும் பல இலக்கியப் பணிபுரிந்து சிறப்படைவதற்கு
எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிவானாக.
கையொப்பம்
எம்.எம். உசேன்
. M. Houssaine
Bac, Sc, Philo.,
Chavalier de La Le’ gion d’ Honnour
GOVT. TOWN KAZY - Ex. M.L.A.
STALWART OF PEACE
PRESIDENT : Inter Religious Fraternal life Community
V. PRESIDENT : Human Rights Protection Society
FOUNDER MEMBER : Alliance Francaise
PONDICHERRY (INDIA)