தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருட் காவியம்


அறச்செல்வி
கர்மேலா லெபோ
வின்செண்ட் தெபோல் சபைத்தலைவி
அனைத்துச் சமயச் சகோதர வாழ்வுச் சங்க உறுப்பினர்
புதுக்சேரி - 1.

வாழ்த்துரை

புதுவைக் கவிஞர் துரை-மாலிறையனும், அவர் தம் துணைவியார்
சூரியவிசயகுமாரியும் தமிழ்ப்பற்று மிக்க தகைசால் தம்பதியர்கள். இவர்கள்
முன்னே எழுதி வெளியிட்டுள்ள 4745 விருத்தங்கள் கொண்ட அருள்நிறை
மரியம்மை காவியமும் ஏறத்தாழ 1260 விருத்தங்கள் கொண்ட அருள்ஒளி
அன்னை தெரேசா காவியமும் - தமிழக அரசின் கவிதைக்கான முதற்பரிசுகளைப்
பெற்றன. இவையேயன்றி இன்னும் பல்வேறு காவிய நூல்களுக்குப் பரிசுகளும்,
பாராட்டுகளும் பெற்றிருக்கிறார். குழந்தை இலக்கியத்துக்கும் அரிய தொண்டு
செய்து பரிசுகளை வென்றிருக்கின்றார். இவையனைத்து வெற்றிகளுக்கும்
உறுதுணையாகவும்-ஊற்றாகவும்-தூண்டுகோலாகவும் அமைந்திருப்பவர் சகோதரி
சூரியவிசயகுமாரியே ஆவார்.

புதுவை அனைத்துச் சமயச் சகோதர வாழ்வுச் சங்கத்தின் இயக்குநர்கள்
குழுவில் இடம் பெற்றுள்ள இவர்கள், கிறித்தவச் சமயத்துக்குத் தொண்டு செய்வது
மட்டுமின்றி, இசுலாமியத் தமிழிலக்கியத்துக்கும் தங்கள் பணியைத் தொடர்ந்திருப்பது
மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் மரபு கவிதைகளைக் கவிநயத்தோடும்,
கலைநயத்தோடும் எழுதும் கவிஞர்களுள் முன் வரிசையில் இருப்பவர் இவர்.
இதை நான் சொல்ல வேண்டியதில்லை. - இவர் பெற்றிருக்கின்ற பரிசுகளும்
பாராட்டுகளுமே பறைசாற்றும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2017 18:16:29(இந்திய நேரம்)