Primary tabs
இப்போது “இறைபேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்” என்னும்
தீந்தமிழ் இலக்கியத்தை இசுலாமிய அன்பர்களுக்கு மட்டுமில்லாமல் எங்களைப்
போன்ற வேற்று நெறியினரும் படித்து - இசுலாமிய நெறியை உணர்ந்து போற்றும்
அளவிற்கு நயமானதொரு காவியத்தை நல்கி இருக்கிறார்.
ஆங்காங்கே காலத்திற்கேற்ற புதிய புதிய உவமைகள் - சமுதாயப்
பார்வையில் தமிழ்நேயம் - மனித நேயக்கோட்பாடுகள் யாவும் நூல்முழுவதும்
விரவிக் கிடந்து மின்னிப் பளிச்சிடுகின்றன.
இந்நூல் இசுலாமியத் தமிழ் இலக்கியத்துக்குக் காலத்தால் கிடைத்த ஒரு
கொடை.
இதனை அளித்த கவிஞர் துரை. மாலிறையனையும், இலக்கியப் பணிகளோடு,
இல்லறப் பணிகளில் இயங்கிக் கொண்டே பல்வகை நல்லறப் பணிகளான,
முதியோர், பார்வை அற்றவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கெல்லாம் மாதந்தோறும்
தன் ஊதியத்தின் ஒரு பகுதியை “ஜக்காத்தாக” (கட்டாயக் கொடை) வழங்கிக்
கொண்டிருக்கின்ற இசுலாம் நெறியைப் போற்றுகிற திருமதி சூரிய விசயகுமாரியையும்
பல்லாண்டு வாழ்ந்து பணிசெய வேண்டுமென்று இறைவனை வேண்டி
அமைகின்றேன்.
-கர்மேலா லெபோ