தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


துரை. மாலிறையன்

என்னுரை

நன்றியுரை

இசுலாமியத் தமிழிலக்கியப் பெருங்கூடலில் இக்காவியம் ஒரு சிறு துளி;
ஆம்! மிகச் சிறிய துளியேதான். அண்ணல் பெருமானார் நபிகள் நாயகத்தின்
(சல்) மாண்புகளை ஓரளவு கூட அறிந்திராத, இசுலாமிய நெறிகளைச் சற்றும்
உணராத பிறப்பினால் வேற்று நெறி சார்ந்த ஒரு கவிஞன் அப்படி என்ன எழுதி
விட்டிருப்பான்” என்று எண்ணிப் புறந்தள்ளுவது உலக இயல்பே!

இறைவன் மீது ஆழ்ந்த பற்றும் - இசுலாமிய நெறியில் தோய்ந்த உள்ளமும்
கொண்டுள்ள இசுலாமியப் பேரன்பர்கள் இந்நூலிலிருந்து எதையும் புதிதாகத்
தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்க மாட்டார்கள் என்பதைத்
திட்டவட்டமாகக் கூறி விடலாம்.

அப்படி இருக்க நான் ஏன் இக்காவியத்தைப் படைத்தேன்? என்று நீங்கள்
கேட்பது போல் நானும் என்னைக் கேட்டுக் கொள்கிறேன்.

விடை இதுதான்:

அருள்நிறை மரியம்மை காவியம் எழுதி வெளியிட்ட பிறகு
இசுலாமியத்துக்கும் காவியம் எழுதித் தன் கணவர் சமய நல்லிணக்கக் கவிஞராக
விளங்க வேண்டும் என்பது என் மனைவியின் தீராத ஆசை. அதனால் இசுலாமிய
நெறி சார்ந்த பல்வேறு நூல்களை வாங்கிவந்து, தான் படித்தும் என்னைப்
படிக்கத் தூண்டியும், இக்காவியம் எழுதுவதற்கு அடிப்படை இட்டு விட்டாள்.
அதோடு மட்டுமின்றி நான் எழுதிய கவிதைகளை எல்லாம் படித்துக் கருத்துரை
வழங்குவதே அவளுடைய அன்றாடப் பணிகளுள் ஒன்றாகும். அதன் விளைவே
இக்காவியத்தின் தழைப்பாகும்.

காவியம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதன்றி, நூலை அச்சேற்றும்
முயற்சியிலும் முழுப்பங்கு அவளுக்கே உரியது. உலக அமைதி
நோக்கத்துக்காகவும் இதை எழுத வேண்டும் என்பது அவளுடைய
உள்ளக்கிடக்கை; இன்று மக்கள் உள்ளத்தில் தோன்றியுள்ள
மதக்காழ்ப்புணர்ச்சிகளையும் அதனால் ஏற்படும் கிளர்ச்சிகளையும், அதன்

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:47:47(இந்திய நேரம்)