தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


காரணமாக நாட்டின் முன்னேற்ற வளர்ச்சியில் ஏற்படுகின்ற தளர்ச்சிகளையும்,
கண்கூடாகக் கண்டு வருகின்றோம். நாட்டின் ஒருமைப்பாட்டுக் கண்ணாடியில்
பற்பல கீறல்கள் ஆங்காங்கே விழுந்து கொண்டுதான் உள்ளன. அக்கீறல்கள்
எங்கோ ஒன்றாக இருந்தாலும் கூட, அடுத்தடுத்து இது நிகழ்ந்து கொண்டே
இருக்குமானால் . . . கண்ணாடி தன் பொலிவை இழந்து விடுமன்றோ? ஆகவே
கண்ணாடியைப் பக்குவமாகப் பாதுகாப்பதும் நமது கடமை ஆகிறது.
அக்கடமையின் உந்துதலே இக்காவிய எழுச்சி.

நபிகள் நாயகத்தின் (சல்) மனிதநேயமாண்பினை உலகுணரக்காட்டி,
இசுலாமியர்கள் அல்லாத ஏனைய நெறியினரும், படித்து இலக்கிய உணர்வோடு
புரிந்து கொள்ள வேண்டும்; அதன் வழியாகச் சமயப் பொறை வளர வேண்டும்
என்பதே எங்கள் நோக்கம். இம்முயற்சியில் நான் வெற்றி பெற்றேனா? என்பதை
இலக்கிய ஆர்வலர்களே முடிவு செய்ய வேண்டும்.

இக்காவியம் ஒரு தமிழ் இலக்கியச் சோலை - ஆங்கே கண்ணாடித்
துண்டுகளுக்கும் பருக்கைக்கற்களுக்கும் - முட்சிதறல்களுக்கும் இடமில்லை.
தமிழ்நயம் காண்பார் தடை ஏதும் இன்றி நடந்து செல்ல வேண்டும். அதுவே
என் நோக்கம்.

சொல்லாட்சிகளைச் சீறாப்புராணம் படைத்த உமறுப்புலவரின் துணை
கொண்டு கையாண்டுள்ளேன். இயன்றவரையில் தூயதமிழைப் பயன்
படுத்தியுள்ளேன்.

ஹஜ் பயணம் - கச்சுப் பயணம்; கஅபா-ககுபா; முஹம்மத்-முகம்மது;
அபூஜகில்-அபூசகுல்; கதீஜா-கதீசா; ஜிப்ரயில்-செபுறயீல்;

இப்படிச் சில மாற்றங்களைப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளேன்.

நாயகப் பெருமானாரின் நல்வாழ்க்கை நெறி இறைவன் இவ்வுலகிற்கு
அளித்த ஒருகொடை - மனித குலத்துக்கு மேம்பாடு தரத்தக்க ஒரு மாண்பு
நெறி, ஒப்புயர்வில்லாத உயர்ந்த ஒழுக்கங்களையும் விழுமிய நோக்கங்களையும்
உலக மக்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தால் - உலகில் சமயக் காழ்ப்புணர்ச்சிகளும்
சண்டைச் சச்சரவுகளும் - உயர்வு தாழ்வு வேறுபாடுகளும் அறவே நீங்கி,

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:46:47(இந்திய நேரம்)