Primary tabs
ஆகலான், இது முற்றுப்பெறாத காதல் ஆகின்றது. இருவரும் ஒருங்கியைந்து
முற்றுப்பெற்ற காதலே அன்பின் ஐந்திணை ஒழுகலாறு. இதனைத் திருவள்ளுவப்
பெருமான்,
காமத்துக் காழில் கனி"
ஐந்திணை: ஐவகை ஒழுக்கம். அவை: முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்
ஆகிய இருத்தல், புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல் என்னும் நிகழ்ச்சிகளாம்.
இவைகள் நிகழ முன் நிகழ்வதே கைக்கிளை. அதற்கு முதல்முதல் காணுதல்
வேண்டும். அது தலைவன் தலைவியைத் தன் கண்ணாற் காண்பது. இதனைக்
கோவைகளில் துவக்கத்திலேயே ‘காட்சி‘ என்ற துறையமைத்துக் கூறப்பெறும்.
அந்த முறையிலேயே எல்லாக் கோவைகளும் தொடக்கமுறுகின்றன.
பெறுவது, திருச்சிற்றம்பலக் கோவையெனப் பெயரிய திருக்கோவையார். மற்றக்
கோவைகளைக் குறிக்குங்கால் உயர்வு குறிக்கும் ‘ஆர்‘ விகுதி கொடுத்து
வழங்கினாரில்லை; இஃது ஒன்றுக்கு மட்டும் அவ்விகுதி கொடுத்து
அழைக்கப்பெறுவது அதன் சிறப்பியல்பு நோக்கியே. அது சொல் பொருள் நயம்,
ஒப்பற்ற இறைவனையே தலைவனாகக் கொண்டுள்ள பண்பு முதலியவற்றால்
சிறப்புற்றிருத்தலை ஓர்க.
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின் றதே‘
2. திருக்கோவையார் : 1.