தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

-


xxiv

க்ஷத்திரியனுக்கும் நாவிதனுக்கும் சிலேடை

முடிவாங்கி வைத்து முதுமங் கலனா
வடிகத்தி யத்த மருவி - படிபுகழச்
சத்திரம்வைத் துள்ள தரத்தால்ரா மையாகேள்
சத்திரிய நேர்நாவி தன்.

ஓலைச் சுவடிக்கும் ஓணாணுக்கும்

வரிகள் கடுமையாய் வல்லவரை யுற்று
பெரியதலை கால்கொம்பைப் பெற்று - மருவுதலால்
கோணாம லேயுதவு கொப்பணவே ளேசுவடி
யோணாநே ராமென் றுணர்.

நீர்ப்பாசன நன்னில நிதியம் நேருஞ் சாவு வாழ்வுகளிற்
பார்ப்பார்க் களித்தோர் பேறெங்கே பார்த்தோம் புலவர்க்
கிழிபழங்கூழ்
வார்ப்பா ரேனும் பூமியுள வரையும் புகழ்ச்சி யோங்குமெனும்
நேர்ப்பாக் கற்றோர்க் குதவுதமிழ் நேயாவாணூர்ச்சர்க்கரையே

விமணம ளாவுசிறு காலறுகா லுழுதாது மென்றூட்டூவ
வீமணவி ழாவிழைபூம் பொழிறிகழுஞ் செங்கோட்டின் மேவிவீர
வீமணவோ வணனருளாற் பகைநூறி நிமிடகவி விளம்பவல்ல
வீமணநா வலநினது சல்லாப மொழியமுது விரும்பினேனே.

திருச்செங்கோடு வீமணக் கவிராயர் கூறியது

தளையவிடா மரை யொளித்த பேட்டடியிற் சூட்டனந்தன் றலைகீழாக
வளையவணங் கப்புலவி நீங்குவன வயல்விஜய மங்கையோங்கு
இளையசந் திரப்பிரப நாயகரை யேத்திமனத் திடரை யெல்லாம்
களையவரு கார்மேகக் கவியரசே வந்தனனிற் காண வென்றே.

இவர் மதம் - சமணம்

காலம் - இந்நூலுட் கூறும் படிக்காசுத் தம்பிரான், தளவாய் ராமப்பய்யர் முறையே கி.பி. 1699 - 1672ல் இருந்தவர்களானதால் இவர்களைப் பாடிய இவர் இற்றைக்கு 220 வருஷங்களுக்குப் பிற்காலத்தவராகக் கருதப்படுகிறார்.

துந்துபி U மார்கழி 12
திருச்செங்கோடு
தி.அ. முத்துசாமிக்கோனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-10-2017 14:13:20(இந்திய நேரம்)